விருதுநகர், செப்.18- விருதுநகரில் சுமார் 800 குடும்ப அட்டைகள் உள்ள ரேசன் கடை பகுதிநேரக் கடையாக உள்ளது. இத னால், பொதுமக்கள் தொட ர்ந்து பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய அருப் புக்கோட்டை சாலை மற்றும் கீழக்கடைத் தெரு இணை யும் இடத்தில் நியாய விலைக் கடை வி.வி.கே.சி.எஸ்.4 உள்ளது. இதில் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை கள் உள்ளதாக கூறப்படு கிறது. இக்கடையில் சுண் ணாம்புக்காரத் தெரு, நீரா வித் தெரு, செந்திவிநாயக புரம் தெரு, பழைய அருப் புக்கோட்டை சாலை, கிருஷ்ண மாச்சாரி சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் பொருட்களை வாங் கிச் செல்கின்றனர். ஆனால், இக்கடையின் விற்பனையாளர் பல நாட்கள் பகுதிநேரக் கடையான மற் றொரு கடைக்கு சென்று விடு கிறார். இதனால், இக்கடை வாரத்தில் பல நாட்கள் மூடப் பட்டே கிடக்கிறது. எனவே, கார்டுதாரர்கள் தங்களுக்கு தேவையான நேரங்களில் ரேசன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீரா வித் தெரு கிளைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வி.வி.கே.சி.எஸ். கடை 4 இல் தினசரி விற்பனையா ளர் பணியில் இருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இக்கடையினை விருதுநகர் மாவட்ட கூட்டு றவு நியாய விலைக் கடை யாக அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையாக மாற்றம் செய்து தர வேண்டு மென பொதுமக்களிடம் கை யெழுத்துப் பெற்றனர். பின்னர், கோரிக்கை மனுவை வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித் தார். இதில் சிபிஎம் நகர் செய லாளர் எல்.முருகன், மாவட் டக்குழு உறுப்பினர் எம். ஜெயபாரத், கிளைச் செய லாளர் பி.ஆனந்தகுமார், மாரிமுத்து, மாரிக்கனி, ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.