districts

img

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றுக!

திருச்சிராப்பள்ளி, டிச. 16 - சாதி ஆணவப் படுகொலை களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி வியாழக்கிழமை இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில இணைச்  செயலாளர் பாலசந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் லெனின் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். 

தஞ்சாவூர்

வாலிபர் சங்கம் சார்பில் தஞ்சா வூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் கே.அருளரசன், இந்திய மாண வர் சங்க மாநில துணைச் செயலா ளர் ஜி.அரவிந்தசாமி, மாணவர் சங்க  மாவட்டத் தலைவர் வி.அர்ஜூன், வாலிபர் சங்க நிர்வாகிகள், பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் டி. ஸ்ரீதர், மாவட்டக் குழு உறுப்பினர் டி. தமிழ்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் யு.சரவணன், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.பெர்னாட்ஷா, ஒரத்தநாடு ஒன்றி யத் தலைவர் ஜி.மாஸ்கோ, திருவை யாறு பி.கிரண்குமார் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். 

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கல் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலா ளர் ஏ.வடிவேல் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி மாவட்ட  தலைவர் ஏ.சிவகுமார் பேசினார். மாவட்டக்குழு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் ஏ.அறிவழகன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்ட பொருளா ளர் பவுல் சத்தியராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ஐயப்பன் ஆகி யோர் உரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ஸ்டா லின், மாவட்டத் துணை தலைவர் எஸ். கபிலன், மாவட்ட துணை செயலா ளர் தயானி மற்றும் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக நீதிமன்ற சாலையி லிருந்து பேரணியாக புறப்பட்டு கச்சேரி சாலை வழியாக கோரிக்கை களை முழக்கமிட்டவாறு கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.


 

;