districts

img

மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை இராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு துவங்கியது

இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் வரை மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை இராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு துவங்கியது. ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திர ராஜா, மணிகண்டன், மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். 10-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட முப்பதுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.