கரூர், ஜூலை 4- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சம்மேளன மாநிலக் குழு கூட்டம் கரூரில் நடை பெற்றது. மாநிலத் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணே சன், சிஐடியு மாநிலச் செயலாளர் ரெங்கராஜ், ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் ஏ.ஜெ.சந்தா னம், மாநிலச் செயலாளர் எம்.பன் னீர்செல்வம் ஆகியோர் பேசினர். மாவட்ட தலைவர்கள், செயலா ளர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் துறையில் அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு, அர சாணை 152, 159-ஐ ரத்து செய்ய வேண்டும். 50 வயதுக்கு மேல் பணி புரிபவர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங் கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜூலை 12 அன்று மாநிலம் தழுவிய மறியல் போராட் டம் நடத்துவது. கிராம ஊராட்சிகளில் உள் ளாட்சி ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட் 7 அன்று, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது. உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டை செப்டம்பர் 23-24 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை யில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.