districts

img

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில், டிச.9- கொரோனா பெருந்தொற்று உயிர்க் கொல்லியாக அனைவரை யும் அச்சுறுத்தியபோது தமது உயிரை துச்சமென கருதி பணியாற்றிய வர்கள் சுகாதாரப் பணியாளர்கள். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இவ்வாறு பணியாற்றிய 22 பல்நோக்கு மருத்துவப் பணியா ளர்கள், 33 செவிலியர்களுக்கு 3 முதல் 6 மாத சம்பளம் சுமார் ரூ.24 லட்சம் நிலு வையாக உள்ளது. இதனை வழங் கக்கோரி மருத்துவக் கல்லூரி வளா கத்தில் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா தடுப்பு ஊழியர்கள் நிய மிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் இந்த ஊழியர்களுக்கு அரசு ஊதி யமும் முன்களப் பணியாளர்களான இவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கியது. ஆனால் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் 6 மாதமாக சம்பளமே பெறாமல் நிர்வாகத்தால் நேரடி ஒப்பந்தத் தொழிலாளர்களாக நியமனம் பெற்ற 22 பல்நோக்கு மருத் துவப் பணியாளர்கள் உள்ளனர். 33 செவிலியர்களுக்கு 3 மாத சம்பள மும் ஊக்கத்தொகையும் நிலுவை யாக உள்ளது.

சம்பள பாக்கியாக உள்ள சுமார் ரூ.24 லட்சத்தை கொடுக் காத நிலையில் நவம்பர் 30 ஆம் தேதியுடன் 55 பணியாளர்களும் வேலையிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு அளித்த ஒப்பந்தத்தின்படி டிசம்பர் 31 வரை வேலை வழங்கியிருக்க வேண்டும்.  வேலை இழந்த ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக மருத்துவக்கல்லூரிக்கு தினமும் வந்து சம்பளம் மற்றும் பணிச்சான்று கேட்டுள்ளனர். இவற்றை வழங்காமல் காலம் கடத்திய நிலையில் டிசம்பர் 9 வியாழனன்று உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஏஆர்எம் ஜெயலட்சுமி, பணம் வந்து திரும்பி விட்டது. வந்ததும் தருகிறோம் என வழக்கம்போல் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரவிருப்ப தாக பாதிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.

;