districts

நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

 தென்காசி, ஆக .23-  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து தினமும் காலையில் 6.30 புறப்பட்டு அம்பாசமுத்தி ரம்,  பாவூர்சத்திரம் சுரண்டை ஆய்க்குடி ,இடைகால், வழியாக தென்காசி மாவட்டம் புளியங்குடி  வரை இயங்கி வந்த அரசுப் பேருந்து தடம் எண்  (பழைய எண் 113) 198 முன் அறிவிப்பு இல்லாமல்  நிறுத்தப் பட்டுள்ளது. இந்த பேருந்தை நம்பி  உள்ள பொது மக்கள், மாணவர்கள், அரசு பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் .மீண்டும் இந்தப் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வ லர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.