districts

img

சிபிஎம் தலைமையில் பெண்கள் போராட்டம்

தேனி, ஜூலை 11- சின்னமனூர் அருகே எரசக்க நாயக்கனூரில் பெண்கள் கழிவறை  அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை யை இடமாற்றம் செய்யக்கோரி ஜூலை 11 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் ஏராள மான பெண்கள் காத்திருப்பு போராட்  டத்தில் ஈடுபட்டனர்.  தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் எரசக்கநாயக்கனூர் 8625-  அரசு மதுபானக் கடை பெண்கள் கழிவறைக்கு அருகில் உள்ளது .இத னால் தொடர்ந்து பல்வேறு பிரச்ச னைகள் இருந்து வந்தன. இப்பகுதி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மேற்படி மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த னர். இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. காத்திருக்கும் போராட்டம்  இதனைத் தொடர்ந்து ஜூலை 11 செவ்வாய்க்கிழமை காலை 11  மணிக்கு மதுக்கடையின் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது இதில் 250- மேற்பட்ட மக்  கள் கலந்து கொண்டனர். அப்பொ ழுது அங்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள மேற்படி மதுக்கடை  ஆறு மாதத்திற்குள் வேறு இடத்  திற்கு மாற்றப்படும் என எழுத்துப்  பூர்வமாக உறுதி அளித்தனர். அத னைத் தொடர்ந்து போராட்டம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  போராட்டத்தில் கட்சியின் தேனி  மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி. வெங்கடேசன்,  ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறு முகம், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.கரண்குமார், என்.அம்ச மணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் எம்.பால்பாண்டி, எஸ்.ஈஸ்வரி, பி. சேகர், எம்.மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.