மதுரை, ஜூலை 10- மதுரை நகரின் சில பகுதிகளில் திங்களன்று மாலை பலத்தக் காற்று டன் மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. குறிப்பாக ஆரப்பாளையம், ஏ, ஏ. ரோடு, தத்தனேரி, ஆரப்பாளை யம் தண்ணீர்த் தொட்டி, மேலப்பொன் னகரம், கே.கே.நகர், செல்லூர், நரி மேடு பகுதிகளில் பலத்த காற்றின் கார ணமாக மரங்கள் முறிந்தது. ஆரப் பாளையம் தண்ணீர் தொட்டி அரு கில் நின்று கொண்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோக்கள் சேதம் அடைந்தது ஏ.ஏ ரோடு பகுதியில் சாலைகள் ஓரத்தில் இருந்த மரங்களின் கிளை கள் முறிந்து விழுந்ததால் அப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர்க் குழாய், பாதாளச் சாக்கடைப் பணிகள் நடை பெறுவதால் மழைநீர் செல்ல வழி யின்றி தேங்கி நின்றதால் மக்கள் அவ திக்குள்ளாயினர். தத்தனேரி மற்றும் கருடர் பாலம் பகுதிகளில் உள்ள தரைப் பாலங்க ளில் மழை நீர் தேங்கியதால் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில் பராமரிப்பு பணிக்காக திங்களன்று காலை பல பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட் டது. மாலையில் மழை பெய்ததால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மக்கள் தவித்தனர். பல இடங்களுக்கு இரவு ஒன்பது மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.