districts

img

கருப்பு பட்டை அணிந்து பி.எஸ்.என்.எல்-எம்.டி.என்.எல் ஓய்வூதியர்கள் போராட்டம்

விருதுநகர், ஜூன்.7- ஒன்றிய பாஜக அரசானது, 2017 ஜனவரி 1  முதல் 15 சதவீத பென்சனை உயர்த்தி வழங்கிட வேண்டும்.  முடக்கப்பட்ட ஐ.டி.ஏ வை உடனே வழங்கிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோக்கைகளை வலி யுறுத்தி ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்  மற்றும் எம்.டி.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தி னர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடபட்டனர். விருதுநகரில் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கோவிந்தராஜ், செல்வராஜ் ஆகியோர் தலைமையேற்றனர். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் கே.புளுகாண்டி பேசினார். மாநில உத வித் தலைவர் எம்.பெருமாள்சாமி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் எம்.முத்துச்சாமி, சங்கையா,பொன்ராஜ் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.