விருதுநகர், ஜூலை 24- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் பட்டி யலின மக்கள் மீது தொட ரும் தீண்டாமை வன்கொடு மைகளைக் கண்டித்து தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்களன்று ஆர்ப் பாட்டம் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட் டத்தில் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநி லக்குழு உறுப்பினர் எஸ். லட்சுமி, மாவட்டச் செயலா ளர் எம்.முருகன், தமிழ்புலி கள் கட்சியின் விடியல் வீரப் பெருமாள், ஆதித் தமிழர் கட்சியின் விஸ்வைகுமார், ஆதித்தமிழர் பேரவையின் கவுதமன், பூவை ஈஸ்வரன், திராவிடர் தமிழர் கட்சி ஆதிவீரன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஊர்காவ லன், மாவட்டப் பொருளா ளர் எம்.சுப்புராம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், “பட்டியலின மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆவி யூரில் தீண்டாமை கொடுமை யில் ஈடுபடுவோர் மீது வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஆவியூரில் நடைபெறும் தீண்டாமைகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாவட்ட நிர்வா கம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென” முழக்கமிட்ட னர்.