districts

img

மகாத்மா காந்தி பிறந்த நாளில் விருதுநகரில் மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு கருத்தரங்கம்

விருதுநகர், அக்.2-  விருதுநகரில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன் னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில்,   மதநல்லிணக்கம் - மக்கள்  ஒற்றுமை பாதுகாப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. விருதுநகர் இலட்சுமி திருமண மண்டபத்தில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு  தேனி  வசந்தன் தலைமை தாங்கி னார். சிறுபான்மை மக்கள்  நலக்குழு மாவட்டத் தலை வர் எஸ்.கே.இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் தொழில்  மற்றும் வர்த்தகர் சங்கத் தலைவர் வி.வி.எஸ்.யோகன்,  பொறியாளர் ஊர்காவலன், இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மு.முகமது எகியா, அனைத்து கிறிஸ்தவ அருட்பணியாளர் ஒன்றி யத்தின் செயலாளர் பாஸ்டர்  பாலச்சந்தர், திமுக நகர் மன்றத் தலைவர் ஆர்.மாத வன், இந்திய தேசிய காங்கி ரஸ் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்  பாலகிருஷ்ண சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் கே. அர்ஜுனன்  ஆகியோர் கருத்துரையாற்றி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.  இராமகிருஷ்ணன், எழுதிய  “மகாத்மாவின் மண்ணில் மதவெறி” என்ற புத்தகத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கி ணைப்பாளர். பேராசிரியர் அருணன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தமுஎ கச மூத்த தலைவர்  ச. தமிழ்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக நூலாசிரியர் சி.பி.எம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.  இராமகிருஷ்ணன் ஏற்புரை  வழங்கினார். முடிவில் வாலி பர் சங்க மாவட்ட செயலா ளர் எம்.ஜெயபாரத் நன்றி  கூறினார். இதில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.      

     பேரா  சிரியர் அருணன் பேசுகை யில்,  பாஜகவினரிடம் அதி கார பலமும், பண பலமும உள்ள காரணத்தால் ஊழ லையும், கட்சித் தாவலையும் சட்டப்பூர்வமாக மாற்றி யுள்ளனர். தற்போது நீதி மன்றத் தீர்ப்புகளும், நீதி பதிகளின் பேச்சுக்களும் வேறுபாடாக உள்ளது.  சுயேட்சையான, சுதந்திர மான அமைப்புகள் ஆளும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டன. 1948 - 49 ல்  குடியரசை உருவாக்க  இந்  திய அரசியல் அமைப்பு சட்  டங்களை டாக்டர் அம்பேத்  கர் இயற்றிக் கொண்டி ருந்தார். அப்போது ஆர் எஸ்.எஸ்சின் ஆர்கனைசர் பத்திரிகையில் அதை விமர்   சித்து எழுதினர். அதா வது, முதன் முதலில் இந்தி யாவில் உருவாக்கப்படும் சட்டத்தில் மனுவின் பெயர் இல்லை என கூறியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் பேதம், பாலின பேதம் ஆகி யவை வர்ணாசிரமத்தில்  உள்ளது. ஆரியர்கள் ஆர்டிக் பகுதியில் இருந்து வந்தவர்  கள் என திலகரே கூறியுள் ளார்.  கடந்த 8 ஆண்டு கால  பாஜக ஆட்சியில் இந்து மக்க ளுக்கு என்ன கிடைத்தது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்ட தால் ஓ.பி.சி, எஸ். சி, எஸ்டி  இந்துக்களின் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டது. அதானி மட்டுமே உலக பணக்காரர் வரிசை யில் 2வது இடத்திற்கு வந் துள்ளார். ஏழை இந்துக்கள் மேலும் ஏழைகளாகவே மாறியுள்ளனர் என்று தெரி வித்தார்.