கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ தக்காளியை ரூ.120க்கு வாங்கும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ள னர். இப்போது தக்காளியோடு சின்ன வெங்காயமும் சேர்ந்துவிட்டது. சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120-ஐத் தாண்டி இன்னும் எகிறிக் கொண்டிருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் உறையச் செய்துள் ளது. தென்னிந்திய உணவுகளில் எங்கும் வியாபித்திருப்பது வெங்கா யம் தான். விலை உயர்வால் இதன் பயன்பாடு பாதிக்கும் கீழாகச் சென்று விட்டது. திண்டுக்கல் மொத்த வெங்காய மார்க்கெட்டில், ஐந்து மாதங்களுக்கு முன், ஒரு கிலோ ரூ. 45-க்கு விற்கப் பட்ட சின்ன வெங்காயம், மெல்ல மெல்ல உயர்ந்து ரூ.70-இல் நிலை கொண்டது. வரத்து குறைந்ததால் திடீரென விலை உயர்ந்து ரூ.140-ஐ தாண்டிச் செல்கிறது. கோடை மழை பொய்த்ததால் பிரச்சனை தொடங்கியது. இது குறித்து திண்டுக்கல் வெங்காய ஏற்று மதி கமிஷன் முகவர்கள் சங்க இணைச் செயலர் எம்.மாரிமுத்து கூறி யதாவது: தாராபுரம், ஆண்டிபட்டி, வத்தலகுண்டு, வேடசந்தூர், உடு மலைப்பேட்டை ஆகிய பகுதி களில் மே மற்றும் ஜூன் மாதத் துவக் கத்தில் மழை பெய்தது. பின்னர் ஜூன் இறுதியில் ஒரு சிறிய மழை பெய்தது. அதனால், பயிர் செய்யும் முறை மாறிவிட்டது. விதைப்பு தாம தமாகத் தொடங்கியது. இதனால் உற்பத்தியாகும் வெங்காயம் அடுத்த மாதம் தான் சந்தைக்கு வரும். கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து உள்ளது. வரும் வெங்காய மூடை கள் ஈரமாக உள்ளது. மைசூரில் இருந்து வரும் 1,500 மூடைகளில் (ஒரு மூட்டையில் 50 கிலோ உள்ளது) 300 மூட்டைகள் நன்றாக உள்ளது. மீதமுள்ளவை ஈரமாக உள்ளது என்றார். ஜே.சண்முகம் என்ற வியாபாரி கூறுகையில், வெள்ளிக்கிழமை சந்தையில் முதல் தரமான வெங்கா யம் கிலோ ரூ.145க்கு விற்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை ரூ.160 வரை கூட ஆகலாம். திண்டுக்கல் உழவர்சந்தையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தரமான வெங்காயம் ரூ.90க்கு விற் கப்படுகிறது.
மதுரையில் அதிகம்
மதுரையில் சின்ன வெங்காயம் ரூ.170க்கு விற்கப்படுகிறது. இது குறித்து இல்லத்தரசி திவ்யா கூறு கையில், “சில மாதங்களுக்கு முன்பு தான் வெங்காயம் ரூ.40க்கு வாங்கி னேன். இப்போது விலை உயர்ந் துள்ளதால், பெல்லாரி (பெரிய) வெங்காயத்தைப் பயன்படுத்து வதைத் தவிர வேறு வழியில்லை. நிச்சயமாக, வெங்காயம் இல்லாத சாம்பார் சாம்பார் இல்லை என்ன செய்வது வாங்கித்தானே ஆக வேண்டியுள்ளது என்றார். இது குறித்து வியாபாரி ஆர்.மாரியப்பன் கூறுகையில், சமீப ஆண்டுகளில் அதிகபட்ச விலை ரூ.120க்கு மேல் இல்லை. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மற்றும் கர்நாடகாவின் மைசூரு போன்ற இடங்களில் இருந்து எங்க ளுக்கு வழக்கமாக வெங்காயம் வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வரும் பலவகையான சின்ன வெங்காயம் மூலம் தட்டுப்பாடு ஈடு செய்யப்படும். ஆனால், இந்த முறை அனைத்து இடங்களிலும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என்றார். இல்லத்தரசி எஸ்.கனகவள்ளி கூறுகையில், பொதுவாக ஒரு குடும்பம் 10 கிலோ வெங்காயம் வாங்கினால் இரண்டு மாதங்க ளுக்கு பயன்படும். ஆனால், இப்போது இரண்டு கிலோ மட்டுமே வாங்கியுள்ளேன். இதை அடுத்த மூன்று மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.