districts

img

குடிநீர் கேட்டு எம்எல்ஏ- மக்கள் மறியல்

திருவில்லிபுத்தூர், ஜூன் 14- விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம்-செங்குளம், அத்திகுளம்-தெய்வேந்திரி ஊராட்சிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு  கடந்த 40 நாட்களுக்கு மேல் குடிநீர்  விநியோகம் தடை பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.  இதையடுத்து எம்.எல்.ஏ மான்ராஜ், முன்னாள்  அமைச்சர் இன்பதமிழன், ஊராட்சி தலைவர் சேகர்  தலைமையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அத்திகுளம் - நாச்சியார்பட்டி சாலை யில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்  கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதை யடுத்து அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப் பட்டது.