இராமநாதபுரம்,செப்.14- கடலாடி வட்டத்தில் 10 கிராமங்களின் குடிநீர் ஆதாரங்களை அழிக்கும் வகையில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கொள்ளை யடிக்கப்படுகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர். குருவேல் தலைமை யில் இராமநாதபுரத்தில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செய லாளர் வி.காசிநாததுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இராமநாதபுரம் மாவட் டம் கடலாடி வட்டம் ஏ. வேப்பங்குளம் கிராமத்தில் பட்டா எண் 16 17 18 இடத் தில் ஆற்று மணல் 23.6.2022 முதல் ஒரு வருட காலத்திற்கு ஒரு மீட்டர் ஆழம் அல்லது அதிகபட்சம் ஒன்றரை மீட்டர் எனக் குறிப்பிட்டு அள்ளுவதற்கு மாவட்ட நிர் வாகம், கனிமவளம் வனத் துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் பரிந்துரையுடன் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி யுள்ளார்.
வேப்பங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகு திகளில் உள்ள கிணறுகள், ஊரணிகள், போர்வெல் குடிநீர் ஆதாரங்கள் தொ டர்பான விவரங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடைபெறாமலேயே இந்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. தற்போது அனு மதித்த அளவுக்கு மாறாக சட்ட விரோதமாக சுமார் 15 மீட்டர் ஆழம் அதாவது 45 அடிக்கு மேலாக மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டங்கள் மூலமாக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன. மேலும் அனுமதிக்கு மாறாக சட்ட விரோதமாக மணல் அள்ளு வதால் குடிநீர் ஆதாரம் வெகு வாக பாதிக்கப்பட்டு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுமார் பத்து ஊராட்சி பகுதி களில் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வா கம் உடனடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீதும் மற்றும் தமிழக அரசு, மாவட்ட ஆட்சி யர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.