districts

மதுரை முக்கிய செய்திகள்

தேக்கடியில் படகு சவாரி நிறுத்தம்

தேனி, டிச.5- முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதியான தேக்கடியில் சுற்று லாப் பயணிகளுக்கான படகுகள் இயக்கப்படுகின்றன.  கேரள சுற்றுலாத்துறை வளர்ச்சிக் கழகம் சார்பில் தினமும் காலை 7.30 மணி,  9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 மணி என்று தின மும் ஐந்து முறை படகு பயண வசதி உள்ளது. இதற்காக ஜனராஜா, ஜல யாத்ரா, ஜலஜோதி, வனலட்சுமி, ஜல தரங்கினி உள்ளிட்ட படகுகள் இயக்கப் படுகின்றன. 1.30 மணிநேரம் அணையின் நீர் தேக்கப் பகுதிகளின் குறிப்பிட்ட தூரத்திற்குள் இந்த படகுகள் சென்று திரும்பும். தற்போது இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நீர்வரத்து அதி கரித்துள்ளதால் படகுகளின் போக்கு திசைமாறும் நிலை உள்ளது. எனவே தற்போது படகு இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

தமிழக முதல்வருக்கு சிபிஎம் நன்றி 

இராமநாதபுரம், டிச.5- வேலைவாய்ப்பு பதிவை 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுவ தாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராம நாதபுரம் தாலுகா குழு நன்றி தெரிவித் துள்ளது.  முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட வலி யுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் திரு வாடானை, கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மனுக்கள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து தமிழக அரசிடம் சிபிஎம் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

காரியாபட்டி, டிச.5- காரியாபட்டி அருகே இரு சக்கர வாக னத்தில் சென்ற கல்லூரி மாணவர் தடுப்புச் சுவரில் மோதியதில் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், இளையான் குடியைச் சேர்ந்த ஷாகுல்ஹமீது மகன் காதர் உசேன் (21). இவர் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில், தனது நண்பர்களைப் பார்த்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தங்கும் அறைக்கு சென்று கொண்டி ருந்தார். மதுரை-தூத்துக்குடி 4 வழிச் சாலையில் மந்திரி ஓடை அருகே வந்த போது தடுப்புச் சுவரில் மோதியதில் தூக்கி  வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காரியாபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் 

இராமநாதபுரம், டிச.5- இராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா பதக்கம் பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தெரி வித்துள்ளார்.  துணிச்சலுடன் உயிரை காப்பாற்று தல், அரசு பொது சொத்துக்களை காப்பாற்றுதல் மற்றும் இதர துணிச்சலான செயல்கள் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழக முதல்வ ரால் 2022-ம் ஆண்டு குடியரசு தினவிழா வில் ‘அண்ணா பதக்கம்’ வழங்கப்பட வுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்களை புரிந்த பொது மக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ‘அண்ணா பதக்கம்’ பெற விண்ணப்பிக்க லாம். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, இராணுவத்தினர் உட்பட அனைத்துத் துறையினரும் விண் ணப்பிக்கலாம்.  விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் வீர தீர செயல் தொடர்பான கை யேடு ஆகியற்றை மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர், மாவட்ட விளையாட்டு அலுவல கம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், இராமநாதபுரம் என்ற முக வரியில் டிசம்பர் 8-க்குள் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.  பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் தலை மையிடத்திற்கு டிசம்பர் 9 அன்று அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

போலி ஆவணம் தயார் செய்ய உடந்தை: நெல்லையில் சார்பதிவாளர் கைது

திருநெல்வேலி, டிச.5- போலி ஆவணம் தயார் செய்ய உடந்தை யாக இருந்ததாக நெல்லையில் சார்பதி வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படு தாவது:-நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த கோபா லகிருஷ்ணன் மனைவி பகவதி (வயது 61) என்பவருக்கு வள்ளியூரில் 5 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தை பவுல் வினோத் என்பவர் பகவதி போல் ஆள்மாறாட்டம் செய்து, அவ ரைப் போல வேறு நபரை அழைத்து சென்று போலி ஆவணம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை பவுல் வினோத், அழகேசன் என்பவருக்கு விற் பனை செய்துள்ளார். அதன்பின் அழகேசன் அந்த இடத்தை சுப்பிரமணியனுக்கு விற் பனை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த இடத்தில் வில்லங்கம் ஏற்பட்டது பற்றி பக வதிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பகவதி தனது நிலத்தை மீட்டு தருமாறு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் மனு கொடுத்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அப கரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸூக்கு உத்த ரவிடப்பட்டது. அதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி மற் றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இந்த விசாரணையில், இதற்கு போலி ஆவணங்களை தயார் செய்ய கங்கை கொண்டான் சார்பதிவாளரான பாளையங் கோட்டை ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சனிக்கிழமை மாலை செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

;