districts

img

போடிமெட்டு மலைச்சாலையில் அருவி போல் கொட்டும் வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு

தேனி, அக்.16- போடிமெட்டு மலைச்சாலையில் அருவிபோல் கொட்  டும் மழைவெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரள  மாநிலம் இடுக்கி மாவட்  டத்தை இணைக்கும் முக்கிய சாலையாக போடி மெட்டு மலைச் சாலை உள்ளது. இந்  நிலையில் சனிக்கிழமை யன்று இப்பகுதியில் தொடர் கனமழை பெய்  தது. இதனால் பல இடங்க ளிலும் மழைவெள்ளம் அருவி போல் கொட்டியது.  இந்த ஆபத்தான நிலையிலும் பலர் வாக னங்களை ஓட்டிச் சென்றனர். மண்சரிவு ஏற்படலாம் என்ப தால் முந்தல் மற்றும் போடிமெட்டு சோதனைச் சாவடி களில் வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தினர். மழைவெள்ளநீர் குறைந்த பிறகே வாகனங்கள்  செல்ல அனுமதிக்கப்பட்டன.

;