திருநெல்வேலி ,டிச .8- தென்காசி மாவட்டம் புளியங் குடியில் இருந்து வாழைமலை யாறு செல்லும் பொதுப்பாதை யை பொதுப்பணித்துறை உடைத்து விட்டனர் .இதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் பொ துப்பணித் துறையை கண்டித்து புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட் டம் நடத்தியது . ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சீனி பாண்டியன் தலை மை தாங்கினார், நிர்வாகிகள் ஈஸ்வரன், ரத்தினசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராமர், முத்தை யா மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்காசி மாவட்ட தலைவர் தி.கணபதி நிறைவுறையாற்றினார்.