மதுரை, அக்.9- மதுரை சிலைமான் அருகிலுள்ள விர கனூரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவ ரது மகன் பாலாஜி, வண்டியூர் கண்ண தாசன் தெருவைச் சேர்ந்தவர் கோ.சந்திர னைச் சந்தித்து தனது தந்தை அரசியல் செல்வாக்கு பெற்றவர். உங்களுக்கு அர சுப்பணி வாங்கிக்கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார். பின்னர் அவரது தந்தை ஏ. ஜெயசந்திரனிடம் சந்திரனை அறிமுகப் படுத்தியுள்ளார். அப்போது, பணம் கொடுத்தால் அர சாங்க வேலையை எப்படியும் வாங்கிவிட லாம் என்று ஜெயச்சந்திரன் தெரிவித்துள் ளார். இதை நம்பி சந்திரன், பாலாஜி. ஜெயச் சந்திரனிடம் ரூ.14 லட்சம் கொடுத்துள் ளார். ஜெயச்சந்திரனும், பாலாஜியும் குறிப் பிட்ட காலத்திற்குள் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தை சந்திரன் திருப்பிக்கேட்டதற்கு ரூ. 7 லட்சம் கொடுத்து விட்டு 8 லட்சம் கொடுத்ததாக எழுதி வாங்கியுள்ளனர். மீதி பணம் தருவ தாகக்கூறி வரச்சொல்லி.சாதியைச் சொல்லி திட்டி பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயற்சித்துள்ளனர். இந்த மோசடி குறித்து கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை தல்லாகுளம காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் பணம் தருவதாக சந்தி ரனை அழைத்துச் சென்ற பாலாஜியும் ஜெயச்சந்திரனும் சந்திரனை சாதியைச் சொல்லி திட்டி,கொலை மிரட்டல் விடுத் துள்ளனர். இதுகுறித்து ஜெயசந்திரன், பாலாஜி ஆகியோர் மீது சிலைமான் காவல் துறை வழக்கு பதிவு செய்ய காலம் கடத்தியது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற நிலையில் சிலைமான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஏ. ஜெய சந்திரன் அவரது மகன் பாலாஜி ஆகிய இரு வரும் தலைமறைவு ஆகிவிட்டனர். போலீஸ் தேடிவருகிறது. குற்ற வாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர் மற்றும் வண்டியூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.