பால்வள அதிகாரி இடைநீக்கம்
தேனி, ஜூலை 16- தேனி மாவட்ட ஆவினில் பால் உற்பத்தியாளர்களிடம் சில மாதங்களாக ஆவின் பால் கொள்முதல் செய்யும் அளவுபாதியாக குறைந்தது. இதனால் தேனி மாவட்ட பால்வள துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், பால் உற்பத்தி யாளர்களுக்கு வழங்கும் பட்டுவாடா பணத்தில் முறை கேடு நடப்பதாக பால்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் பால்வளத்துறை அதிகாரிகள் குழு வினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், தேனி மாவட்ட பால்வளத் துறை துணைப் பதிவாளர் கணேசனை பணி இடைநீக்கம் செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், அந்த உத்தரவில் இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை முடியும் வரை துணைப் பதிவாளர் கணேசன் தேனி மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது என்றும் குறிப்பி டப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி பால்வள துணைப் பதிவாளராக, திண்டுக்கல் பால்வள துணைப் பதிவாளர் சண்முகநதி கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனைவியை கொடுமைப்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு
தேனி, ஜூலை 16- தேனி பவர் கவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது40). இவருக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ஜெயேந்திரன் (53) என்பவருக்கும் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஜெயேந்தி ரன் மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.மேலும் சசி கலா என்ற பெண்ணுடன் சேர்ந்து சித்ரவதை செய்வதாக தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார் ஜெயேந்திரன் மற்றும் சசி கலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
இராமேஸ்வரம், ஜூலை 16- இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமையன்று மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மீனவர்கள் அவசர அவ சரமாக படகுகளை கரைக்கு திருப்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் இராமேசுவரம் துறைமுகத்திற்கு வந்தனர். மீன்பிடிக்க செல்ல 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் காரணமாக ஒவ்வொரு பட கிற்கும் பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் கரை திரும்பிய தாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இராமேஸ்வரம் மீனவர்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
மதுரை, ஜூலை 16- மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுண்ணாம்பூரில் உள்ள பெரி யய்யன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சுண்ணாம்பூர் - திருவாதவூர் சாலையில், பெரியமாடு, சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 69 ஜோடி மாடுகள் பங்கேற்று பந்தய தூரத்தை சீறிப்பாய்ந்து கடந்து வந்தன. அப்போது சாலையின் இருபுறமும் நின்றிருந்த பார்வை யாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் போட்டியினை கண்டு ரசித்த னர். சின்னமாடு பிரிவில் போட்டி தொடங்கிய போது, எல்லை ஆரம்ப பகுதியில் சாலை ஓரத்தில் நின்று போட்டியினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, 7ஆம் வகுப்பு படிக்கும் பூவந்தியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆனந்தகுமார், மற்றும் கீரனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜாமணி ஆகியோர் மீது மாட்டுவண்டி மோதியது.இதில் இருவரும் காயமடைந்தனர். இவர்கள் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனியில் துண்டறிக்கை விநியோகித்த முதியவரை தாக்க முயன்ற இந்து அமைப்பினர்
தேனி, ஜூலை 16- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முன்பாக கிறிஸ்தவ மதம் தொடர் பாக துண்டறிக்கை விநியோகம் செய்த பெரியவர், இளம் பெண்ணை தாக்க இந்து அமைப்பினர் முயன்றதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. தேனி மருத்துவக் கல்லூரி அருகே வயதான நபரும், ஒரு இளம் பெண்ணும், மருத்துவமனைக்கு வருபவர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அந்த துண்டு பிர சுரங்களில் கிறிஸ்தவ மதம் குறித்த கருத் துக்கள் இடம் பெற்றிருந்தது. அரசு மருத்து வமனை முன்பாக கிறிஸ்தவ மதம் குறித்த நோட்டீஸ் விநியோகம் செய்வது குறித்து தகவல் கிடைத்ததும், இந்து எழுச்சி முன் னணி நிர்வாகி ராம்குமார் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி காசிமாயன் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் அங்கு வந்தனர். துண்டு பிர சுரங்கள் வினியோகம் செய்த நபரிடம் இங்கெல்லாம் மதத்தை பரப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யக் கூடாது எனக் கூறி தகராறில் ஈடுபட்ட னர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த நபரை பிடித்து, காவல் நிலையத்திற்கு வரும்படி இழுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த க.விலக்குபோலீசார் இரு தரப்பினரையும் விலக்கி, பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். மேலும் பொது இடமான அரசு மருத்துவமனை முன்பாக இது போன்ற மதம் சார்ந்த துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்யக்கூடாது என்றும் எச்ச ரித்து அனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் வேன் புகுந்து 3 பேர் பலி
ஒட்டன்சத்திரம், ஜூலை 16- ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரம் இருந்த பேக் கரிக்குள் வேன் புகுந்து ஏற் பட்ட விபத்தில் கோவை யைச் சேர்ந்தவர்கள் உள் ளிட்ட 3 பேர் இறந்தனர். கோயமுத்தூர் அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், இவ ரது மனைவி சரஸ்வதி ஆகி யோர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதி யில் பாண்டி பூசாரி கோவி லுக்கு வந்துள்ளனர். உடன் அவருடைய மைத் துனர் விஸ்வநாதன் மற்றும் உறவினர் பழனிச்சாமி வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் ஒட்டன்சத்திரத்திற்கு முன் பாக நேற்று காலை தங்கச்சி யம்மாபட்டியில் வந்து கொண்டிருந்தபோது சாலை யோரம் உள்ள பேக்கரியில் காரை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள கஞ்சிக்கால் வலசைச் சேர்ந்த சிவராஜ் ஒட்டன்சத்திரம் மருத்துவ மனைக்கு வருவதற்காக தனது தாயர் காளியத்தாளு டன் தனது மோட்டார் சைக்கி ளில் புறப்பட்டு வந்தனர். அப்போது சோழவந்தா னைச் சேர்ந்த ராம்குமார் என் பவர் கோயமுத்தூரில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக ஓட்டி வந்த வேன் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக இடது புறம் சாலையோரத்தில் இருந்த பேக்கரிக்குள் புகுந்து மோதி நின்றது. அப்போது பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்த கோயமுத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவ ரது உறவினர் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்தி லேயே இறந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த காளியாத் தாள் சம்பவ இடத்திவேயே இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவராஜ் படு காயம் அடைந்து திண்டுக் கல் அரசு மருத்துவக்கல் லூரி மருந்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்பி ளிக்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தல் சரஸ்வதி அவரது உறவினர் விஸவ நாதன் ஆகியோர் பேக்கரி அருகே உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டதால் உயிர் தப்பினர்.