கம்பம், செப்.18- கம்பத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை கொண்டாட விடாமல் வன்முறையில் ஈடுபட்ட பாஜக, மதவெறி அமைப்புக ளைச் சேர்ந்த 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கம்பத்தில் காந்தி சிலை முன்பு தந்தை பெரியார் 144- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நீதி நாளாக கொண்டுவதற்கு கம்பம் திராவிடர் கழகம் சார்பில் கம்பம் தெற்கு காவல்துறையிடம் அனுமதி பெற்றனர்.இதையடுத்து சனிக்கிழமை காலை காந்தி சிலை முன்பு திராவிட கழகத்தினர் பெரி யார் உருவப் படம் அடங்கிய பிளக்ஸ் போர்டை வைத்திருந்த னர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜகவினர் தேரடி அருகே பெரி யார் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட திராவிடர் கழகத்தின ருக்கு அனுமதி அளிக்கக் கூடாது என காவல்துறையிடம் பாஜகவி னர் பலமணிநேரம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வஉசி திடல் பகுதியில் பெரியா ரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுமாறு திராவிடர் கழக நிர்வாகிகளுடன் காவல் ஆய்வா ளர் லாவண்யா பேச்சுவார்த்தை நடத்தினார்.இதற்கு மறுப்புத் தெரிவித்த திராவிடர் கழகம்,திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் அனுமதி பெற்ற இடத்திலேயே பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம் என்றனர். இந்த நிலையில் பாஜகவினர் திராவிட கழகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கம்பம்-குமுளி தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரி வித்து திராவிடர் கழகம், திமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகி களும் அதே சாலையில் எதிர் எதிரே நின்று சாலை மறியலில் ஈடுபட்டு பாஜகவைக் கண்டித்து கோஷங்களை முழங்கினர்.
தகவலறிந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவி னர் 20 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் காந்திசிலை முன்பு வைக் கப்பட்டிருந்த பெரியாரின் உருவப் படத்திற்கு திராவிடர் கழகத்தி னர், திமுக,மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,ஏரியாச் செயலா ளர் கே.ஆர்.லெனின் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: .
பேரணி செல்ல அனுமதி இல்லை, உருவபடத்திற்கு மரி யாதை செலுத்திக் கொள்ளுங்கள் என்று காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில் காந்திசிலை முன்பு தேரடி இருப்பதால் அங்கு பெரியார் உருவப்படம் வைக்கக் கூடாது. வேறு இடத்திற்கு நிகழ்ச்சியை மாற்ற வேண்டும் என்று மதவெறி சக்திகள் விடுத்த மிரட்டல் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை மிரட்டி, ஷாமியானா பந்தல் போட அனு மதிக்காததோடு பெரியார் உருவப் படத்தையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இச்செய்தி அறிந்து திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் திரண்டு போராட்டத் தில் ஈடுபட்ட பின்னரே காவல் துறையினர் அனுமதி வழங்கினர். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அரசு விழாவாக தமிழக அரசு கொண் டாடி வரும் வேளையில் கம்பத் தில் பிறந்தநாள் ஊர்வலம் நடத்த வும்,பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய விடாமலும் பெரும் பிரச்சனை ஏற்படுவதற்கும் துணை போன கம்பம் காவல்துறையினரை கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கம்பம்,உத்தமபாளையம் பகுதியில் வன்முறையை தூண்டி அதன் மூலம் அரசியல் லாபம் ஈட்ட நினைக்கும் பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.