வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

மின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

உதகை , ஜன. 24 - மின் ஊழியர் மத்திய அமைப்பின் உதகை கோட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று சி.மணிகண்டன் தலை மையில் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் மது சூதனன் சிறப்புரையாற்றினார். கோவை தெற்கு மையக் கோட்ட செயலாளர் டி.பழனிசாமி ,சிஐடியு மாவட்ட செய லாளர் ஆர்.ரமேஷ்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் நீலகிரி கிளை செய லாளர் ஏ.சண்முகம் நிறைவுரை ஆற்றினார். இப்பேரவையில்  தலைவராக ஆர்.ரவிசண்முகம், செய லாளராக ஜே.எம்.ஜெகநாதன்,  துணை தலைவராக பி. தேவராஜ் , துணை செயலாளராக வி.ராஜசேகர்  உள் ளிட்ட 6 பேரை கொண்ட புதிய கோட்டக்குழு தேர்ந் தெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வேளாண் விரோத சட் டங்களை திரும்பபெற வேண்டும். மின்சார திருத்த சட்டம் 2020 ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;