districts

அடுத்தடுத்து மாடுகள் உயிரிழப்பு : கிராம மக்கள் அதிர்ச்சி

நாமக்கல், நவ. 29- பரமத்திவேலூர் அருகே மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 3 மாடுகள் அடுத்தடுத்து உயிரி ழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பில்லூர் ஊராட்சி மேற்கு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர் தனது மனைவியுடன் கறவை மாடுகளை வைத்து பால் விற்பனை செய்து வருகிறார். இந்நி லையில், சனியன்று காலை மணி வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள் ளார். இதையடுத்து பிற்பகலில் வீடு திரும்பிய தும், மாடுகளுக்கு தண்ணீர் காட்டியுள்ளார்.

தண்ணீர்குடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மாடு கீழே விழுந்து உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணி மற்ற இரண்டு மாடுகளையும் கயிற்றால் கட்டியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த இரு மாடுகளும் உயிரிழந்தன. இதையறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஏரா ளமானோர் கூடினர்.இதுகுறித்த தகவலின்  பேரில் நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை நோய்த்தடுப்புப் பிரிவு உதவி இயக்குனர் நட ராஜன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இறந்து கிடந்த மாடு களை ஆய்வு செய்து, ரத்த மாதிரிகளைப் பரிசோத னைக்காக சேகரித்தனர். இறந்த மாடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்த் தாக்குதல் இருக் கக்கூடும் என்ற அச்சத்தில் உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்படவில்லை. மாடு களின் ரத்த மாதிரியின் முடிவு  வந்த பிறகே உடற் கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கால் நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து 3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிமையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.