நாமக்கல், மே 14- தமிழக முதல்வரின் தனிச்செய லாளரான தினேஷ்குமாரின் தந்தை திங்களன்று காலமானார். இந்நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினின் தனிச்செயலாளர் தினேஷ் குமார். அவரது தந்தை ரவி. இவர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறை வால் உயிரிழந்தார்.
இதையடுத்து வெண்ணந்தூ ரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன், எ.வ.வேலு, பொன்முடி, மதிவேந்தன் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், செவ்வாயன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின், கனிமொழி எம்.பி., ஆகி யோர் சென்னையில் இருந்து விமா னத்தின் மூலமாக சேலம் விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் பயணம் செய்து வெண்ணந்தூரில் உள்ள தினேஷ்குமாரின் இல்லத் திற்கு சென்று ரவியின் உருவப்படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தினேஷ்குமார் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறு தல் கூறினர்.