districts

img

‘போட்டோ ஷூட் தியானம்’ முடிந்தது; தில்லி புறப்பட்டுச் சென்றார் மோடி!

நாகர்கோவில், ஜூன் 1- மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற் காக கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்  திர மோடி நடத்திய ‘அரசியல் தியா னம்’ ஒருவழியாக நிறைவடைந்தது. ஜூன் 1 சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணியுடன் தியானத்தை முடித்துக்  கொண்ட பிரதமர் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று மலர் மாலை வைத்து  வணங்கிய பின் தில்லி திரும்பினார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்  முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி  ‘தியானம்’ என்ற பெயரில் கன்னியா குமரியிலுள்ள விவேகானந்தர் மண்ட பத்தில் மவுன அரசியல் பிரச்சாரத்தைத் துவங்கினார்.

தியானத்தின் ஒவ்  வொரு தருணத்தையும் ‘வைரலாக’  மாற்றுவதற்காகப் பல புகைப்படக்கா ரர்கள் மற்றும் வீடியோகிராபர்களை பிரதமர் மோடி தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.  தனியார் ஊடகங்களுக்கு மட்டு மல்ல, அரசு செய்தி நிறுவனங்களை யும் கூட அவர் அனுமதிக்கவில்லை. விவேகானந்தர் பாறையில் உள்ள  தியான அறையில் பார்வையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க  எப்போதும் அனுமதிக்கப்படுவ தில்லை.

ஆனால், மோடியின் தியான போட்டோஷூட் எவ்வித தடையுமின்றி அரங்கேறியது. கன்னியாகுமரியில் உள்ள தமிழ்  நாடு விருந்தினர் மாளிகை தற்காலிக  பிரதமர் அலுவலகமாக மாற்றப்பட்டி ருந்தது. தில்லியில் இருந்து வந்த  சுமார் ஐம்பது அதிகாரிகள் போட்டோ சூட் உள்ளிட்ட விவகாரங்களை நிர்வ கித்து வந்தனர்.  இதனால், மூன்றாவது நாளாக சனியன்றும் கன்னியாகுமரியில் காவல்துறையின் கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது.

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த சனிக்கிழமை மாலை வரை பிரதமரின் போட்டோஷுட் தியானம் நடந்தது.  பிரச்சாரம் முடிந்து, வாக்காளர்கள் சுதந்திரமாகவும் சுயமாகவும் சிந்தித்து  வாக்களிக்கவே 48 மணி நேர மவுனம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மக்களுக்கு அந்த வாய்ப்பைக்கூட வழங்காமல் ஊடகங்கள் மூலம் மறைமுகமாக ஒரு  போட்டோ ஷூட் தாக்குதலை மோடி  நடத்தினார். இது தேர்தல் நடத்தை விதி களை மீறும் பிரதமரின் உத்தி என  புகார் எழுந்தாலும், தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மூன்றுநாள் அரசி யல் போட்டோ ஷூட் தியானப் பிரச்சா ரத்தை முடித்துக் கொண்டு தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.