நாகர்கோவில், மார்ச் 2-
தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் 18 ஆவது மாநில மாநாடு சனிக்கிழமையன்று அகத்தீஸ்வரம் விவேகானந் தா கல்லூரியில் துவங்கியது.
ஞாயிறன்று காலை 9 மணிக்கு பேரணி கொடியேற் றத்துடன் துவங்கும் பொது மாநாட்டிற்கு மாநிலத் தலை வர் எல். எம்.ஒய். ஏஜாஸ் தலைமை வகிக்கிறார். . தமிழ் நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு விழா பேரூரை நிகழ்த்துகிறார் . மகா குரு சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இம்மாநாட்டில் மலர் வெளியீடு நடைபெறுகிறது. மலரை வெளியிடுபவர் மலர் ஆசிரியர் விஜயன், இத னைப் பெற்றுக் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வாழ்த்துரை யாற்றுகிறார்.