திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் மேல் சோழங்குப்பத்தில் கிராம நிர்வாக அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், பள்ளி வளாகம் முழுவதும் கழிவு நீர் சூழ்ந்துள்ளது. இதை சீரமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆதமங்கலம் பகுதி குழு சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பி.சுந்தர், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.