திருப்பூர், நவ. 24 - திருப்பூர் வாவிபாளையம் பகுதி டாஸ் மாக் கடையினை அரசு அதிகாரிகள் வலியு றுத்தியபடி மூட அப்பகுதி மக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் வடக்கு வட்டம் நெருப்பெரிச் சல் கிராமம் வாவிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புகள், குடி யிருப்போர் நல சங்கம் சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இதன் பிறகு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலால் துறை துணை ஆணையாளர் தலைமையில், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில், வாவிபாளையத்தில் அமைக்கப் பட்ட டாஸ்மாக் கடையை மூன்று மாதங் களில் வேறு இடத்திற்கு மாற்றுவது, வேறு இடம் கிடைக்கவில்லை என்றாலும் நிரந்தரமாக அக்கடையை மூடுவது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையின்படி நவம்பர் 19 ஆம் தேதியன்று மேற்படி கடையை இடமாற் றமோ அல்லது நிரந்தரமாக மூடவோ செய்தி ருக்க வேண்டும்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய மாவட்ட நிர்வாகத்தின் செயல் மக்களை மேலும், போராட்டங்களுக்கு தூண்டிவிடுவதாகும். எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்களால் வலியுறுத்தப்பட் டுள்ளது.