districts

img

கழிவுநீர் சூழ்ந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், டிச.6- திருப்பூர் கே.என்.பாளையம் செல்லும் சாலையில், சாக் கடைக் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் நோய்த்தொற்று ஏற் படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் கே.எஸ். தியேட்டர் பகுதி யில் இருந்து கவுண்டநாயக்கன்பாளையம் (கே.என்.பாளை யம்) செல்லும் பாதை  அருகே உள்ள சாக்கடைக் கால் வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கால்வா யின் அருகில் உள்ள பாதை முழுமையாக கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இந்த கழிவு நீரின் வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள் ளது. பல நாட்களாக இந்த சீர்கேடான நிலை நீடித்தாலும் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி சுகாதாரம்  காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

ஏற்கெனவே இப் பகுதி டெங்கு காய்ச்சல் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பகு தியாக இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.