districts

அவிநாசி : உணவுப் பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

அவிநாசி, டிச.6- திருப்பூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, அரசால் தடை செய் யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அப ராதம் விதித்தனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பிஎன் சாலை, கொங்கு பிரதான சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட கடை களில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்த மூன்று நபர்க ளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், பாலிதீன் கவர் வைத்திருந்த இரண்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரமும் அப ராதம் விதித்தனர். இதேபோல், உணவுப் பொருள் தயாரிப்பு தேதி குறிப்பி டாமல் விற்பனைக்கு இருந்த தின்பண்டங்கள், காலாவதி யான 9 லிட்டர் குளிர்பானங்களைக் கைப்பற்றிய அதிகாரி கள், கொங்கு நகர், எம் எஸ் நகர், பகுதிகளில் கலப்பட தூள் விற்பனை செய்யப்பட்டதற்காக குற்றவியல் வழக்குப் பதிவும் செய்தனர்.

;