செவ்வாய், ஜனவரி 19, 2021

districts

பூட்டிய வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை

அவிநாசி, டிச.12- அவிநாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த  5 சவரன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ரங்கா நகர், வைஷ்ணவி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜ் (43). கார் மெக்கானிக்கான இவர், கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு வெளி யூர் சென்று விட்டார். இந்நிலையில், வெள்ளியன்று வீட்டிற்கு திரும்பிய அவர் வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சிய டைந்தார். இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயராஜ் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

;