districts

img

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

திருநெல்வேலி, ஜுன் 5- நெல்லை  மாவட்டம், பாபநாசம் நீர்தேக் கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் புதன்கிழமை  அன்று (05.06.2024) தண்ணீர் திறந்து வைத்தார்.

நெல்லை  மாவட்டத்தில் உள்ள பாபநா சம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தின் கீழ் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு கோடைமேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்) நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்) என மொத்தம் 18,090 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனம் (35 குளங்கள்) பெறும் ஆயக்கட்டு நிலங்களுக்கு கார் பருவ சாகுடி மேற்கொள்வதற்காக  05.06.2024 முதல் 02.10.2024 வரையிலான 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத் தில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும். விவ சாயப் பெருமக்கள், எதிர்வரும் நாட்களில் நீர்த்தேக்கங்களில் எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறப்படாத பட்சத்தில் நீர்வளத்துறையினரின் வழிகாட்டுதலின்படி சுழற்சி முறையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், நீர் விநியோகப் பணி யில் நிர்வளத் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கு மாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) மதனசுதாகரன் , இணை  இயக்குனர் (வேளாண்மை) முருகானந் தம், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;