districts

img

‘போதை பொருள் விற்பதும், அதற்கு துணை போவதும் பாவம்’

தஞ்சாவூர், மே 18 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னப்பூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் ஒருங்கிணைந்து, “கிராமத்தில்  மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன் படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது”  என ஊராட்சி மூலம் தீர்மானித்தனர். இதையடுத்து, அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், “பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் எந்தவித போதைப் பொருட்களும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்றாலோ, விற்பனைக்கு துணை போனா லோ, இந்த கிராமத்திற்கு செய்யும் துரோ கம். பல குடும்பங்களின் பாவச் செயலில் ஈடு படாதீர்கள் - இவண் பொன்னாப்பூர் கீழ்ப்பாதி இளைஞர்கள்” என்ற வாசகங்கள்  நிறைந்த சுவரொட்டிகளை பேருந்து நிறுத்தம்,  மளிகைக் கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் முழுவதும் ஒட்டி யுள்ளனர்.  மேலும், மது உள்ளிட்ட போதைப் பொருட் களுக்கு எதிராக வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றனர். இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், “இளைஞர்கள் ஒன்றிணைந்து எங்கள் கிராமப்புறங்களில் போதைப்பொருள் விற்க வும், வாங்கவும் தடை செய்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதற்கு பெண்கள் மத்தி யில் நூறு சதவீதம் வரவேற்பு கிடைத் துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, பொரு ளாதாரத்தில் எங்கள் கிராமம் பின்தங்கி உள்ளதற்கு போதைப் பொருள்தான் தடை யாக இருந்தது. எங்கள் ஊர் வளர்ச்சிக்காக போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது, விற்கக் கூடாது என முடிவெடுத்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” என்றனர்.