திருவாரூர், ஜூலை 11-
காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். அங்கன் வாடி மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மாவட்டத் தலைவர் தவமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
(சிஐடியு) மாவட்டச் செயலாளர் முருகையன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் பிரேமா, மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா, சிஐ டியு மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடைபெற்றன.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் ஒன்றியத் தலை வர் டி.சாந்தி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் சுலோக்சனா, ஒன்றியச் செயலாளர் மகேஸ்வரி, சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் சி.அன்புமணவாளன் உள் ளிட்டோர் பேசினர்.
கந்தர்வகோட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் என்.மணிமேகலை தலைமை வகித்தார். மாநில பொரு ளாளர் எஸ்.தேவமணி கண்டன உரை யாற்றினார். திருவரங்குளத்தில் ஒன்றியத் தலைவர் விசாலாட்சி தலை மையில் மாவட்டச் செயலாளர் ஏ.சி. செல்வி உரையாற்றினார். அன்ன வாசலில் ஒன்றித் தலைவர் என்.மாலா தலைமையில் மாவட்டத் தலைவர் பி.விஜயலெட்சுமி பேசினர்.