ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு
தஞ்சாவூர், டிச.3 - ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பூதி யம் ரூபாய் ஆயிரத்திலிருந்து 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் படுகிறது. தமிழக சட்டசபையில், ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் ஊராட்சி துறைக்கான மானியக் கோரிக்கையின் போது, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், ஊரகப் பகுதி வளர்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனவே, அவர்களை ஊக்குவிக்கும் வித மாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந் திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து, நவ.15 தமிழக அரசு வெளியிட்ட அரசாணை யின்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் ரூ.2,000 ஆக வழங்கப்படுகிறது” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் இன்று மின்தடை
அரியலூர், டிச.3 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் துணை மின் நிலையம், உடையார்பாளையம் துணை மின் நிலையம், தா. பழூர் துணை மின் நிலையம், தழுதாழைமேடு துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதி களான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப் பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந் தோண்டி, குருவாலப்பர்கோவில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார் பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங் குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மண கெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வானதிரையன்பட்டி னம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்கு டம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனை பிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல் லூர், இடைகட்டு, ஆயுதகளம், (வடக்கு, தெற்கு) தழுதா ழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் டிசம்பர் 4 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கபசுரக் குடிநீர் வழங்கல்
தஞ்சாவூர், டிச.3 - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிளை சார்பில், காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைச் செயலாளர் பாவா தலைமை வகித்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். 800 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப் பட்டது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து டிச.10 வாகன நிறுத்த போராட்டம்
திருச்சிராப்பள்ளி, டிச.3 - வாலிபர், மாதர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ஆட்டோ, சாலை போக்கு வரத்து ஊழியர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் திருச்சி சிஐடியு மாவட்ட குழு அலு வலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் விளக்க உரையாற்றினார். ஒன்றிய மோடி அரசு பெட்ரோல், டீசல் மீது 270 சதவீத கலால் வரி விதித்ததே பெட்ரோ லிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரண மாக உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தற்போது குறைந்து உள்ள நிலையில், மத்திய அரசு விலையை குறைக்க மறுக்கிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனை விளக்கி அனைத்து பகுதி மக்க ளிடமும், வாகன ஓட்டிகளிடம், சிக்னல், டோல் பிளாசா, பேருந்து நிலையம் பகுதிகளில் டிசம்பர் 7,8,9 ஆம் தேதிகளில் துண்டு பிரசு ரம் கொடுத்து பிரச்சாரம் செய்வது. டிசம்பர் 10 ஆம் தேதி பகல் 12 மணிக்கு 10 நிமிடம் சாலை களில் செல்லும் வாகனங்களை நிறுத்தி போராட் டம் நடத்துவது. திருச்சி மாவட்டத்தில் தஞ்சை ரோடு, திண்டுக்கல் ரோடு, மதுரை ரோடு, கரூர் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன், சத்திரம் பேருந்து நிலையம் உள்பட 50 இடங்க ளில் இந்த போராட்டத்தை நடத்துவது. இதில் சிஐடியு, வாலிபர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர், ஆட்டோ சங்கங்கள் வாகனங் களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வாலி பர் சங்க லெனின், விவசாயிகள் சங்க கே.சி. பாண்டியன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க தங்கதுரை, ஆட்டோ சங்க மணிகண்டன், மாதர் சங்க சரஸ்வதி, பிஎஸ்என்எல்இயு சுந்தர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.