districts

சுமைப் பணித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, பாதுகாப்பு கவசம் வழங்குக!

திருவாரூர், ஜன.9 - சுமைப் பணித் தொழி லாளர்களுக்கு கூலி உயர் வும் உயிர்க் காக்கும் கவசங் களும் வழங்கக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் சங்கம்  (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  திருவாரூர் மாவட்டம் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு திருவாரூர் மண்டல  தலைவர் சி.ஆர்.அண்ணா துரை தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலா ளர் இரா.மோகன் சிறப்புரை யாற்றினார். சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, பொருளாளர் ஆர். மாலதி மற்றும் அமைப்பின்  நிர்வாகிகள் உரையாற்றினர்.  மாவட்டப் பொருளாளர் கே. எஸ்.ராஜா நன்றி கூறினார். 2012 முதல் 2016 வரை  உள்ள பருவகால பணியா ளர்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும். அதற் கான தகுதிப் பட்டியலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு கால தாம தமின்றி பணிப் பயனை வழங்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தர வுப்படி ரூ.475 தினக் கூலி வழங்க வேண்டும். எல்காட் ஊழியர்களை கழக ஊழி யர்களாக அறிவித்து நிரப்ப வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மய மாக்கக் கூடாது. சுமைப் பணி  தொழிலாளர்களுக்கு கூலி  உயர்வையும், உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.