தஞ்சாவூர், ஜூலை 23 -
தஞ்சாவூரை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மு.சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டார். தொடர்ந்து, புகையிலை, போதைப் பொருட்களை உட்கொள்ள மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கி ணைப்பாளர் சந்திரகுமார் பீட்டர், சுகாதார ஆய்வாளர் இரா.அகேஸ்வரன், நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் இஸ்மாயில், பேராசிரியர்கள், மாணவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் பி.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.