பொன்னமராவதி, டிச. 4 - அரசுப் பள்ளியின் பழமை வாய்ந்த கட்டிட சுவரை உட னடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத் துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 46 மாண வர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக் கட்டி டத்தின் அருகே சுமார் 80 ஆண்டு காலம் பழமை வாய்ந்த சுவர் ஒன்று உள்ளது. இந்த பள்ளிச் சுவற்றில் அரசமர வேர் ஒன்று வளர்ந்து சுவற்றை பிளந்து மழை நீரில் ஊறிப்போய் எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. அக்கட்டிடத்தின் ஓரத்தில்தான் புதிய பள்ளி கட்டிடச் சுவர் உள்ளது. இதற்கிடை யில் உள்ள சந்தில் பள்ளி மாணவ-மாணவிகள் அமர்ந்து படித்து, விளையாடி வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த பள்ளிக் கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.