districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி திருபுவனம் - வேப்பத்தூர் தற்காலிக ஆற்றுப் பாலம் சீரமைக்கப்பட்டது

கும்பகோணம் டிச.11 - தஞ்சை மாவட் டம் திருவிடை மருதூர் அருகே  உள்ள திருபு வனம் - வேப்பத் தூரை இணைக் கும் கான்கிரீட் பாலம் சிதலம டைந்து ஆபத் தான நிலையில் தற்காலிக மரப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பெய்த கனமழையால், மரப்பாலம் உடைந்து பழுதடைந்ததால் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி சென்று மக்கள்  அவதிப்பட்டனர்.  இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் “உயிர்பலி வாங்க காத்திருக்கிறது திருபுவனம் - வேப்பத்தூர் மரப்பாலம்” என்ற தலைப்பில் நவம்பர் 28 ஆம் தேதி செய்தி வெளி  வந்தது. அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பாலத்தை சீரமைக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டு நெடுஞ்சாலை  துறைக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதன் நடவடிக்கையாக பழுதான பாலத்தை நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, தற்காலிக மரப்பாலத்தை சீரமைத்து, ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன் 2022 ஜூன் மாதத்திற்குள் தரமான கான்கிரீட் பாலம் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தரப்படும் என அதி காரிகள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தனர். இதனால் போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது.  இதன் தொடர் நடவடிக்கையாக மரப்பாலம் தற்போது சீரமைக்கப்பட்டு உள்ளது. எனவே நிரந்தரமான கான்கிரீட் பாலம் அமைக்கும் வரை பொதுமக்கள் கவனமாக இந்த பாலத் தில் செல்லுமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் குழு  கேட்டுக் கொண்டுள்ளது.