தஞ்சாவூர், ஜூலை 3-
தஞ்சாவூரில் கடந்த வியாழக்கிழமை மணமக்கள் குட்டி(எ)சந்தானம் - அனிதா வுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் சின்னை.பாண்டியன் முன் னிலையில், மணமகன் குட்டி (எ) சந்தானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். மேலும், தீக்கதிர் ஆண்டு சந்தா தொகை ரூ.2000-ஐ மணமக் கள் சார்பில் வழங்கினார்.
இவ்விழாவில் 13 பேர், கட்சி துணைக் குழுவில் தங்களை இணைத்துக் கொண்ட னர். இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி. செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.மாலதி, என்.குருசாமி, என்.சர வணன், மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.