தஞ்சாவூர், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம், காவேரி சிறப்பங்காடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை யில், முதல்வர் மருந்தகத்திற்கான மருந்துகள் சேமிப்புக் கிடங்கு மற்றும் மருந்தகத்தினை மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் எம்.அரவிந்த், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் புதன்கிழமை செய்தி யாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்தில், தஞ்சாவூர் வட்டத்தில் 8 மருந்தகமும், பூதலூர் வட்டத்தில் 1 மருந்தகமும், திருவையாறு வட்டத்தில் 1 மருந்தகமும், கும்பகோணம் வட்டத்தில் 3 மருந்தகமும், பாபநாசம் வட்டத்தில் 3 மருந்தகமும், திரு விடைமருதூர் வட்டத்தில் 4 மருந்தகமும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 7 மருந்தகமும், மதுக்கூர் வட்டத்தில் 2 மருந்தக மும், பேராவூரணி வட்டத்தில் 3 மருந்தகமும் என மொத்தம் 32 மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.