districts

img

கீழையூரில் தமுஎகச கலை இரவு

நாகப்பட்டினம் ஜூன் 18-

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர் சங்க  கீழையூர் ஒன்றிய கிளை  சார்பில்   திருப்பூண்டி கலை இரவு நடைபெற்றது.

   கிளைத் தலைவர் மு. பத்மநாதன் தலைமை வகித்தார், கிளைச் செயலாளர் ஏ.வி.எம்.பகத்சிங் வரவேற்றுப் பேசினார், மு.ப.ஞானசேகரன் முன்னிலை வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஆதி.உதயகுமார் துவக்க உரையாற்றினார், மாவட்டத் தலைவர் ஆவராணி ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

    மாநிலத் துணைச் செயலாளர்கள் மருது பாரதி, அ.கரீம், ஊடகவியலாளர் தி.செந்தில் வேல்  கருத்துரையாற்றினர். புதுகை பூபாளம், புதுவை தாய்மண், புதிய களம் நாடகம், காட்டு ரோஜா குழுவினரின் கும்மி யாட்டம் மற்றும் சிந்தை பூந்தளிர் சிலம்பாட் டம் ஆகியோரின் கலை நிகழ்வுகள் நடை பெற்றன.

    மதுரை சந்திரன், வாழை சுந்தரேசன், கானா அகிலன், தங்கபொண்ணு, சத்திய சீலன், தங்கமணி ஆகியோர் பாடல்கள் பாடினர். அ.மீ.ஜவகர், புலவர் சுரேஷ், கேப்டன் ராஜ், சக்தி சம்பத் ஆகியோர் கவிதை வாசித்த னர்.  

    பெரும் தொற்று காலகட்டத்தில்   கொரோ னாவால் இறந்த  300-க்கும் மேற்பட்ட உடல் களை அவரவர் மத வழக்கத்தின்படி நல்ல டக்கம் செய்த திருப்பூண்டி ஓ.எஸ்.இப்ரா ஹீம் தலைமையிலான இஸ்லாம் நண்பர்கள்  குழுவினர் பாராட்டப்பட்டனர். மாவட்ட துணைச் செயலாளர் சி.பி.செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிளைப்  பொருளாளர் கே.டி.முருகையன் நன்றி கூறி னார்.