districts

சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக

பாபநாசம் ஜுலை 24-

     நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை  புறக்கணிக்கும் வகையில் வெளியிடப் பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றப் பதி வாளரின் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ. வுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தி யுள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

    நீதிமன்ற வளாகங்களில் இனி திரு வள்ளுவர் மற்றும் காந்தியடிகள் படங்கள்  மட்டுமே இடம் பெறவேண்டும். மற்ற தலை வர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும்  என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்  சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகத் தெரி கிறது. பாபா சாகிப் அம்பேத்கரை நீக்கம் செய்தல் என்னும் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு என்று நாம் இதனை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தீண்டாமைக்கு எதிரான போர்க்குணம், அயல்நாடு சென்று கடுமையாக உழைத்துப் பெற்ற பட்டங்கள், வியக்கவைக்கும் மேதைமை, உலக வட்ட மேசை மாநாடு களில் சிறப்புமிக்கப் பங்களிப்பு, நாடாளு மன்ற அரசியல் செயல்பாடுகள் என சீரிய பணிகளைச் செய்தவர் அம்பேத்கர்.

    இந்தியாவின் நீதி அமைப்புகள் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியல் சாசன விதிகளின் வழியே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசியல் சாசனத்தை எழுதும் குழுவை யார் தலை மையில் போடலாம் எனும் தேடல் நேர்ந்த போது அம்பேத்கர் பெயரை முன்மொழிந்த வர் காந்தியடிகள்.  

    டாக்டர் அம்பேத்கர் தலைமையேற்று வழங்கிய அரசியல் சாசனத்தின் அடிப்படை யில் இயங்கும் நீதிமன்றங்களில் அவரை புறக்கணிப்பது அநீதியானது. எனவே சென்னை உயர்நீதி மன்றம் பதிவாளரின் சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.