districts

ரேசன் கடைகளில் காய்கறிகளை மலிவு விலையில் வழங்க வேண்டும் மாதர் சங்கம் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 17-

     திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் கோமதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “தமிழகத்தில் உயர்ந்து வரும் விலை வாசியால் (தக்காளி, இஞ்சி, வெங்காயம், பச்சைமிள காய், காய்கறிகள்) ஏழை, எளிய மக்கள் மிகவும் சிர மத்திற்கு உள்ளாகின்றனர். அத்தியாவசியத் தேவையான காய்கறிகளின் விலை உயர்வு என்பது மக்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கிறது. எனவே மக்களின் அன்றாட உணவு தேவையை நிவர்த்தி செய்ய, திருச்சி மாவட்டத்தில் உள்ள  அனைத்து ரேசன் கடைகளிலும் மலிவு விலையில் காய்கறி கள் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.