districts

img

மாணவிகளுக்கு புதுகை ஆட்சியர் பாராட்டு

புதுக்கோட்டை, ஜன.25 - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக  பணிபுரிந்த  மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் புத்தகப்  பரிசுகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். 2023 ஆம் ஆண்டில் கலைத்துறை, சமூக  சேவை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 9, 10, 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 10 பெண் குழந் தைகளுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள், கேட யங்கள் மற்றும் புத்தகப் பரிசுகளை மாவட்ட  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன்கிழமை வழங்கினார். மாவட்ட சமூகநல அலுவலர்  க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.