புதுக்கோட்டை, ஜூலை 7-
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி உயிரி ழந்தவரின் வாரிசுதாரருக்கு அரசு சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக் கிழமை நிதியுதவி வழங்கி னார்.
ஆலங்குடி தாலுகா, கொத்தமங்கலம் வட்டம் சிதம்பரவிடுதி, ஒத்தான் விடுதி கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் 29.6.2023 அன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வித்யாவின் கணவரும் வாரிசுதாரரு மான கோபுவிடம் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ. 4,00,000-க்கான காசோ லையினை வியாழக்கிழமை நேரில் வழங்கி ஆறுதல் கூறி னார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, கோட்டாட்சியர் முருகேசன், ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தி வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.