பேராவூரணி, மே 11-
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் சரகம் துலுக்கவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (55) வட்டி தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (49) என்பவ ருக்கு 2017-ஆம் ஆண்டு ரூ.13.50 லட்சம் வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார்.
சிறிது சிறிதாக அசலும், வட்டியும் செலுத்திய நிலையில் காமராஜ் ரூ.1 லட்சம் மட்டும் கொடுக்க வேண்டியிருந்ததாம். ஆனால், கடன் வாங்கியபோது காமராஜ் கொடுத்த மூன்று காசோலைகளை திரும்ப கொடுக்காமல் வைத்திருந்த பாலசுப்பிர மணியன், ரூ.1 லட்சத்திற்கு பதிலாக ரூ.13.50 லட்சம் தரவேண்டும் எனக் கேட்டு மிரட்டி யுள்ளார்.
ஆனால், காமராஜ், ‘‘ரூ. 1 லட்சம் மட்டும்தான் தரவேண்டும். அதை மட்டும் தான் தருவேன்’’ எனக் கூறியுள்ளார். இத னால் பாலசுப்பிரமணியன் பேராவூரணி அருகேயுள்ள தூராங்குடியை சேர்ந்த அவரது உறவினர் முருகானந்தம் என்பவ ரிடம் காமராஜ் கொடுத்த காசோலையை கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி என காமராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த காமராஜ் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காமராஜ் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு பால சுப்பிரமணியன் திரும்பவும் கேட்டதோடு, காசோலையை மோசடி செய்யும் நோக் கத்தில் வங்கியில் டெபாசிட் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பாலசுப்பிரமணியன், இவருக்கு உடந்தையாக இருந்த முரு கானந்தம் ஆகியோர் மீது, அதிக வட்டி வசூல் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், பாலசுப்பிரமணியனை கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் புதுக் கோட்டை சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள முருகானந்தத்தை தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் அதி முக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக் கது.