கரூர், ஆக.21 -
கரூர் மாவட்டம் மாயனூரில் அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளியில் நடை பெற்று வரும் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார்.
பின்னர் ஆட்சியர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததா வது:
தமிழகத்தில் ஏற்கனவே 26 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் நடை பெற்று வருகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து மாவட்டங்களி லும் அரசு மாதிரி பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறி வித்ததன் அடிப்படையில், வருகிற கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்க உள்ளது.
இந்தப் பள்ளி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெற உள்ளது. இப் பள்ளி 400 மாணவர்களும், 400 மாணவியர்களும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்பட உள்ளது. இதில் 19 முதுகலை ஆசிரியர் களும் 10 பட்டதாரி ஆசிரியர் களும் பணிபுரிய உள்ளனர்.
அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்பட உள்ளன. இப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர் களுக்கு பாடப் புத்தகங் களைத் தவிர, உயர்கல்விக் கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக் கப்படும். குறிப்பாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இப்பள்ளியை நடத்த உள்ளது. அதற்காக, அகண்ட காவிரி பாய்ந்தோ டும் மாயனூரில், அகண்ட அறிவை புகட்டும் கரூர் மாவட்ட மாதிரி பள்ளி அமைந்துள்ளது. கிட்டத் தட்ட ரூ.2.75 கோடி மதிப்பில், ஆய்வகங்கள், விடுதிகள் மற்றும் பல்வேறு உள்கட்ட மைப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
உழவும், நெசவும்தான் நமக்கு பிரதான தொழில். இந்த தலைமுறையினர் நல்ல தொழில் முனைவோர் களாக மாறுவதற்கு, சிறந்த அடித்தளமாக இந்தப் பள்ளி அமையும். மிகச் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட உள் ளன. இது உண்டு உறை விட பள்ளியாக அமைந்துள் ளது. சிறந்த உணவு, சிறந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.
‘எலைட்’ என்ற இந்த மாதிரி பள்ளிக்கு முதல் வருடத்தில் சேரும் மாணவ, மாணவியர்களை மிகவும் திறமை வாய்ந்தவர்களாக உருவாக்க, ஒரு உதார ணமான பள்ளியாக இது திகழும். பசுமையாக இருக்கக் கூடிய இப்பள்ளி யில், ஆசிரியர்கள்-விடுதிக் காப்பாளர்கள் அங்கேயே தங்கி பணிபுரிய உள்ள னர். எனவே அரசுப் பள்ளி களில், இப்பள்ளி வழிகாட்டு தலாகவும் முன்னுதாரணமா கவும் இருக்கும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பொதுப் பணித்துறை (கட்ட டம்) சச்சிதானந்தம், கரூர் மாவட்ட மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியை விஜய லட்சுமி, தனித்துணை ஆட்சி யர் (சபாதி) சைபுதீன், ஆசிரி யர்கள் உள்ளிட்ட பலர் உட னிருந்தனர்.