districts

img

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

கும்பகோணம், ஜன.21 கும்பகோணம் பல் நோக்கு சமூக சேவை மைய வளாகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது. மாவட்ட அலுவலர் சீனி வாசன் மற்றும் கும்ப கோணம் ரெட் கிராஸ் துணைத்தலைவர் ரொசாரி யோ,தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பழ.அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் நூற்றுக் கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் 75 யுடி ஐடி கார்டுகளுக்கான விண்ணப் பம் பெறப்பட்டது. மருத்துவர் குழுக்கள் மூலம் மருத்துவ பரிசோ தனை செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டது.  தொடர்ந்து பயனாளிகள் அனைவருக்கும் காது கேட்கும் கருவி மாற்றுத்திற னாளிகள் பயன்படுத்தும் மூன்றுசக்கர வாகனம் வழங் கப்பட்டது.