பாபநாசம், ஜூலை 2-
தஞ்சாவூர் விற்ப னைக் குழு, பாபநாசம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற் றது. பாபநாசம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிரா மங்களான இடங் கண்ணி, அகராத்தூர், பூந் தோட்டம், ஏரவாஞ்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 2280 குவிண் டால் பருத்தியை 1471 விவ சாயிகள் எடுத்து வந்த னர். கும்பகோணம், பண் ருட்டி, விழுப்புரம், செம்ப னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்சம் ரூ.6,469, குறைந்தபட்சம் ரூ.4,709, சராசரி ரூ.5,763 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு-ரூ.1,31,45,193 ஆகும்.