தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், திருவிசநல்லூர் ஊராட்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திட்டத்தின்கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.